2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இலத்திரனியல் கடை எரிந்து நாசம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னாக உள்ள தனியார் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

திருநெல்வேலி இராமநாதன் வீதியில் உள்ள நியூகுளோபல் ஸ்ரார் என்ற  வர்த்தக நிலையமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவே இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் வர்த்தக நிலையத்தில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கடையின் மேற்குப் புறமாக உள்ள தூவரத்தின் ஊடாக பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கடையில் இருந்து  8 போட்டோ பிரதி இயந்திரங்கள், 20 கணனிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .