2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் யாழ் மாணவன் மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைகள் கட்டப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மாணவனை மீட்டுள்ள மிரிஹான பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

கனடாவிற்கு விஸா பெறுவதற்காக யாழ்ப்பாணம் நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்திருந்த மாணவனே பொலிஸாரினால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்புக்கு வந்த அந்த மாணவனை கல்கிசைக்கு கடத்திச்சென்று மதுபானத்துடன் போதைபொருளை கலந்து கொடுத்துள்ளனர். மயக்கமடைந்த அவரை கஹதுடுவ, வெனிவெல்கொலவில் வீடொன்றுக்கு கொண்டுசென்று அங்கு கைகளை கட்டி தடுத்துவைத்துள்ளனர்.

அதன்பின்னர் மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர்கள் அவரை விடுவிக்க வேண்டுமாயின் 25 இலட்சம் ரூபாவை கப்பமாக தருமாறு கோரியுள்ளனார். அதில் 50 ஆயிரம் ரூபாவை அவ்விருவரும் பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாணவின் உறவினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மிரிஹான பொலிஸார், அந்த மாணவனை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த மற்றுமொருவரை தேடி வலைவிரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .