2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு வேட்பாளர் மௌன விரதம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவரும்,  ஐக்கிய ஜனநாயகமுன்னணியின் வடமாகாண சபை வேட்பாளருமான வி. சகாதேவன் மௌன விரத்தில் முன்னனெடுத்து வருகின்றார்.

04 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அவர் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் மௌன விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நல்லூர் ஆலய வளாகத்தில் அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மௌனவிரத போராட்டத்தினை வடமாகாண சபை தேர்தல் காலங்களான எதிர்வரும் ,20,21, ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலேயே வாக்குரிமை பெற்றுள்ள சகல மக்களும் தங்களுடைய வாக்குச்சீட்டினை இந்த தேர்தலில் ஒரு பலமான ஆயுதமாக நினைத்து பயன்படுத்த வேண்டும்.

அரசியல் போராட்டத்திற்கு ஒரு தொடக்கமாக இந்த தேர்தல் அமையப்போவதால், ஆயுத கலாச்சாரத்தில் மக்களை கொன்றவர்களையும், அரசியல் மூலம் மக்களை காட்டிக்கொடுத்தவர்களையும் இனங்கண்டுகொள்வதுடன், அவ்வாறானவர்களை வீடுகளிலிருந்து துரத்தியடித்து காட்டிற்கு அனுப்ப வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக மட்டுமே 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபையில் தமிழ் மக்கள் முழுமையான அதிகாரங்களை பெறவேண்டுமாயின் ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் தமிழ்க்கட்சியாக அமைய வேண்டும் இதுவே சகல பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக அமையும்.

ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை, சமூக விரோத சக்திகள் குழப்பி விடாமல் இறைவனின் ஆசீர்வாதத்தை நான் கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறான தீய சக்திகள் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து, தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போன்ற 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மௌன உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன், அவர் இந்த மூன்று நாட்களும் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .