2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழ் .மாகாஜனக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா   

யாழ். தெல்லிப்பழை மாகாஜனக் கல்லூரியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் முன்னாள் அதிபர் நவமகாஜனா சிற்பி அமரர் தெ.து.ஜெயரத்தினத்தின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி இம்மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மாகாஜனக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களாக கடமை புரியும் 15 இற்கும் மேற்பட்டவர்களினால் இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த மருத்துவ முகாமின்போது நோய்கள் பற்றிய ஆலோசனைகளும்  வழங்கப்படவுள்ளதால் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் கல்லூரியின் அதிபருமான கே.வேல்சிவானந்தன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .