2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்; 8 பேர் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட மாகாண சபைத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திலிருந்து அனந்தி தப்பிவிட்டதாகவும் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிவில் உடையில் வந்திருந்த நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுழிபுரம் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்களை கண்காணிக்கும் நிறுவனங்களில் ஒன்றான கபே அறிவித்துள்ளது.

அனந்தியின் வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த  ஆதரவாளிடம் அனந்தி எங்கே என்று கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வீட்டில் இருந்த ஆதரவாளர்கள் 12 பேரில் 8 பேர் தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .