2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு தேர்தல்; நோர்வே, கனடா ஆராய்வு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான நோர்வே தூதுவர் மற்றும் கனடா உயர்ஸ்தானிகள் ஆகியோர் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
 
இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களைச்  சந்தித்து கலந்துரையாடியுள்ள இவ்விருவரும், வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் கட்சிகளின் வெற்றிவாய்ப்புக்கள், தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் வெற்றிபெறப்போகும் கட்சி முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் நீதியான ஒரு தேர்தலை சந்திப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்று இந்தச் சந்திப்பில் நோர்வே தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் காலத்தில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் தேர்தல் காலத்தில் இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்தும் நோர்வே தூதுவரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக யாழ் ஆயர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .