2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ வெற்றிபெற்றால் பொதுநலத்துடன் செயற்பட வேண்டும்: மன்னார் ஆயர்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

'வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால்  கட்சிகளுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை தவிர்த்து பொது நலத்துடன் செயற்பட வேண்டும்' என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயர் இல்லத்தில் நோர்வே தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

'அரசியல் என்பது ஒரு சமூக சேவை. அதனை வியாபாரத்திற்கோ சுயநலத்திற்கோ பயன்படுத்தாது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப செயற்பட வேண்டும்.

தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து செயற்திட்டம் ஒன்றைத் தயாரித்து அதனை முன்னேடுக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இந்த நாட்டை வளமான ஒரு நாடாக மாற்ற முன்வரவேண்டும்' என்றார்.

'எந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனை அரசாங்கதுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டிய திட்டம் எது? சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் எவை? எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்? என்று கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்இ 'போட்டிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால் நீதிக்காக நாம் யாரிடம் செல்வது என்று நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பில் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளோம்.

அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது. இவ்வாறான வன்முறையும் அச்சுறுத்தல்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில் நீதிக்காக நாம் யாரிடம் செல்ல முடியும்.

இன்று மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக பெருளவு பெருன்பான்மை இன அதிகாரிகள் கடமைக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் அதிகாரிகள் ஒருசிலர் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளார்.

பெருன்பான்மையின அதிகாரிகள் கதைப்பது என்ன என்று தெரியாத நிலையில் தமிழ் அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது' என்று அவர் தெரிவித்தார்.

'மன்னாரில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இராணுவத்தினர் தெரிவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக' ஆயர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது கிராம மட்டத்தில் இருந்து தனது அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

கட்சிகளுக்குள்ளே முரண்பாடுகள் இருக்கலாம். இருந்தாலும் அதனைத் தவிர்த்து தமிழ் மக்களின் நலன்களிற்கான தமது அரசயற் பயணத்தை முன்னெடுக்கவேண்டும் சுயநல அரசியலைக் தவிர்த்து செயற்பட வேண்டும்' என அவர் மேலும் சொன்னார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .