2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'அனந்தி அரசுடன் இணைந்தார்': பத்திரிகை செய்தியால் யாழில் பரபரப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்தார். தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி எனும் தலைப்பிலான செய்தியினால் யாழில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'உதயன்' என்ற பெயரிலேயே யாழ் வீதிகளில் இந்த பத்திரிகை வீசப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 5.00 தொடக்கம் இந்த பத்திரிகை வீதியில் வீசப்பட்டுள்ளதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு பக்கங்கள் கொண்ட இந்த பத்திரிகை மக்களை குழப்பும் நோக்கில் அரச அடிவருடிகளால் மேற்கொள்ளப்படுள்ளது என்று இது எமது பத்திரிகைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதி இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணவபன் தெரிவித்தார்.

 உரிமையா சலுகையா வரலாற்று முடிவு இன்று! எனும் தலைப்பியே இன்று சனிக்கிழமைக்குரிய உதயன் பத்திரிகை பதிப்பு வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .