2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொடிகாமத்தில் துப்பாக்கி சத்தம்; பிரதேசத்தில் பதற்றம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். வரணி பகுதியில் மூன்று முறைகள் துப்பாக்கிச்சத்தம் கேட்டமையினால் அந்த பிரதேகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படடுள்ளது.

கொடிகாமம் மகாவித்தியாலயத்திற்கு முன்னாள் நின்ற சாவச்சேரி பிரதேச சபைத் உப தவிசாளர் யோகராஜா அவர்கள் இனந்தெரியாத நபர்களினால் பிடித்து அங்கிருந்த கட்டிடம் ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இனந்தெரியாத நபர்களை கலைக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் மயிரிழையில் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளதுடன் வாகனம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .