2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கரவெட்டியில் விபத்து: மூவர் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையிலும்இ யாழ்.போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

ஒரு மாதம் நிறைந்த குழந்தையொன்றை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வாடகைக் கார் ஒன்றில் கொண்டு சென்று திரும்பும் வேளையில்இ கார் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பெருந்தெரு புலோலி தெற்கு புலோலியினைச் சேர்ந்த ஆ.ஆதவன் (வயது 63) என்பவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த மேலும் இருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக சென்ற குழந்தையும்இ தாயும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவுமின்றி தப்பினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .