2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கூட்டமைப்பின்; வட மாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களிற்கும் வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில், வட மாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வட மாகாண சபையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .