2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கட்டிடம் இடிந்ததில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத் ,நவரத்தினராசா


யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அப்பாடசாலையின் ஆசிரியரொருவரும் மாணவரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். இணுவில் மத்திய கல்லூரியிலேயே நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.

தற்போது மேற்படி பாடசாலையில் புதிய கட்டிடம் அமைக்கப்படுகிறது. இக்கட்டிடம் அமைக்கும் இடத்திற்குச் சென்ற மேற்படி ஆசிரியரும் மாணவருமே கட்டிடம் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்துள்ளனர்.

இணுவில் மத்திய கல்லூரி ஆசிரியரான நாகலிங்கம் சிவநாதன், மேற்படி பாடசாலை க.பொ.த. சாதாரணதர மாணவரான  பாலச்சந்திரன் கஜமுகம் ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக இணுவில் மத்திய கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .