2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இரு மொழி அடையாள அட்டைக்கு மீள விண்ணப்பம்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினராசா

தனிச் சிங்களத்தில் தேசிய அடையாள அட்டைகள் பெற்றவர் மீண்டும் விண்ணப்பித்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு ஆட்பதி திணைக்களம் அனுப்பியுள்ள சுற்றுநீருபத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண சபை தேர்தலையொட்டி நடத்தப்பட்ட நடமாடும் அடையாள அட்டை சேவையில் வழங்கப்பட்டுள்ள சில அடையாள அட்டைகளின் விபரங்கள் தனி சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிச் சிங்களத்தில் மட்டும் விபரங்களை பொறிக்கப்பட்ட அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றவர்கள் அதிலுள்ள விபரங்கள் சரியா, பிழையா எனத் தெரியாத நிலையிலுள்ளனர்.

இவ்வாறு அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றவர் தங்கள் தங்கள் கிராம சேவகர்கள் மூலம் மீளவும் விண்ணப்பித்து, தமிழ், சிங்கள மொழிகள் பொறிக்கப்பட்ட தேசிய அடையாள அட்;டைகளைப் பெற்றுக்கொள்ளலாமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .