2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குடும்பஸ்தர் தீயில் எரிந்து மரணம்

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 23 நாட்களாக தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.

மல்லாகம் கட்டுவனைச் சேர்ந்த  இளையவி ஸ்ரீதரன் (வயது 58) என்பவரே மரணமடைந்தவராவார். இப்பகுதியிலுள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்;காக கிணற்றுக்குள் இருந்த ஆலமரத்தை எரித்து துப்பரவாக்க முற்பட்ட வேளையில் அருகிலுள்ள பற்றைக்கும் தீ வைக்கப்பட்டது.

அதன்போது மண்ணென்னை என நினைத்து ரின்னரை எரியும் நெருப்பில் ஒருவர் தவறுதலாக  ஊற்றியுள்ளார். ரின்னர் கானில் நெருப்பு பற்றியதும் ரின்னரை ஊற்றியவர் அருகில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவரை கவனியாது ரின்னர் கானை எறிந்துள்ளார். 

இதனால் குறிப்பிட்ட நெருப்புக் கான் தாக்கியதிலே இவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையிலேயே இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .