2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர்- பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், நவரத்தினராசா


யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி வடமாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.ரில்கோ ஹோட்டலில் இச்சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, வடமாகாணத்தில் பொலிஸார் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய சட்டம் ஒழுங்குகள் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் விளக்கமளித்ததோடு பொலிஸார் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது மாதத்தில் 31 நாட்களும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான மேலதிகள கொடுப்பனவுகள் மற்றும் மருத்துவக் கொடுப்பனவுகள் யாவும் காலதாமதமாக கிடைப்பதாகவும் இதனை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட செயலாளர் இனிவரும் காலத்தில் உரிய கொடுப்பனவுகள் யாவும் விரைவாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணரட்ண, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பிரதிப் பொலிஸ் அதியட்சகர்கள், வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வட மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்தின, மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின்  பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், வட மாகாண பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .