2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுகாதாரம் அல்லாத ஊழியர்களை பணி நீக்க யாழ். மாநகர சபை தீர்மானம்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபையில் சுகாதாரம் அல்லாத ஊழியர்களை கடமையில் இருந்து நிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.

தற்காலிக தொழிலாளிகளாக 700  பேர் யாழ். மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட சுகாதார தொழிலாளர்களின் தேவையின் அடிப்படையில் சுகாதார ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர் என யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இவர்களில் சுகாதாரம் அல்லாத ஊழியர்களை கடமையில் நிறுத்தி நிரந்தர தொழிலாளர்கள் 200 பேரை பத்திரிகை விளம்பரத்தின் ஊடாக தகுதியின் அடிப்படையில்  தெரிவுசெய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேவைக்கதிகமாக சுகாதார தொழிலாளர்கள் மாநகர சபையில் கடமையாற்றி வருகின்றதாக பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனாலேயே நிரந்தர தொழிலாளர்களை நியமிப்பதற்கும் தற்காலிக சுகாதார தொழிலாளர்களை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மாநகர ஆணையாளர் மேலும் கூறினார்

இதனை எதிர்த்து ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். மாநகர சபை சுகாதாரம் அல்லாத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .