2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'வடமராட்சி இ.போ.ச – தனியாருடன் இணைந்து செயற்பட வேண்டும்'

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை போக்குவரத்து சபையின் வடமராட்சி பருத்தித்துறை போக்குவரத்து சாலையினர் பருத்தித்துறை தனியார் பேரூந்து சங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்' என தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் என்.அன்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 'எமது தனியார் சங்கத்தின் சேவையை காலை முதல் மாலை வரை 12 நிமிடங்களுக்கு ஒரு முறை நடத்தி வருகின்றோம். அதேபோல் இலங்கை போக்குவரத்து சபை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தமது சேவையை நடத்துகின்றது.

இதனால் இருசேவைகளும் சிறிய நேர இடைவெளியில் நடைபெறுவதனால் பயணிகளை ஏற்றுவதில் போட்டித்தன்மை ஏற்படுகின்றது என்றார்.

இப்போட்டித்தன்மையை குறைப்பதற்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது சேவையை ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு நடத்துமாறும்' அவர்; வேண்டுகோள்விடுத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .