2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ் சேவை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

யாழில் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்திற்குபட்ட மூன்று கிராம மக்களின் வசிதி கருதி தனியார் பஸ்சேவை நீடிகப்பட்டுள்ளது.

வலி.வடக்கிற்குட்பட்ட மாவைகலட்டி, வீமன்காமம், கொல்லங்கட்டி ஆகிய பிரதேசங்களுக்கே காங்கேசன்துறையிலிருந்து தனியார் பஸ் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்  போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இப்பிரதேச மாணவர்கள் 3 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்து வந்தே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார், தனியார் மினிபஸ் சங்கத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் காலை, மதியம், மாலை என ஒரு நாளுக்கு மூன்று தடவைகள் அப்பகுதிக்கு தனியார் மினிபஸ் சேவையினை நடத்துவதற்கு தனியார் மினிபஸ் சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .