2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.மாநகர சபை தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

யாழ். மாநகர சபையில் கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து தற்காலிக ஊழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். மாநகர சபை முன்னாள் சுகாதார குழு தலைவர் சுதர்சிங் விஜயகாந் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெற்று வருகின்றது.

அத்துடன், சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினரான பரமு திருஞானசம்பந்தர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்களுடன் இன்று கலந்துரையாடியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .