2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமத்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்


தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து மாநகர சபை தற்காலிக ஊழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் யாழ். மாநகர சபை முன்பாக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

மாநகரசபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந்தின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக  தொடர்ந்து நடைபெற்று.

இந்நிலையில் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன், யாழ் மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் திருமதி நீலலோஜனி கேதீஸ்வரன், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்களுடன்  இன்று மாலை 4 மணி முதல் யாழ்.மாநகர சபை முதல்வர் கேட்போர் கூடத்தில் சந்திப்பொன்றை நடத்தினர்.

இச்சந்திப்பில் தற்காலிக ஊழியர்களின் நியமனமானது முன்னுரிமை அடிப்படையில் மாநகர சபையின் சட்டதிட்டத்திற்கமைய பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததினைத் தொடர்ந்து, இன்று மாலை 6.30 மணியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தினை யாழ்.மாநகரசபை தற்காலிக ஊழியர்கள் கைவிட்டுள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .