2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


சமூக ஒருமைப்பாட்டு வாரத்ததை முன்னிட்டு 'கல்விக்கான பிரவேசம்' என்னும் திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ். ஓட்டுமடம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிக்கும், சிறார்களுக்கும் ரூபா 50 ஆயிரம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, யாழ். மொழிச்சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் முன்பள்ளிக்கான உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் யாழ் பிரதேச செயலர் திருமதி தெய்வேந்திரம் சுகுணவதி, மற்றும் தேசிய மொழில்கள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், யாழ். மொhழிச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .