2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பலி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளினை டிப்பர் வாகனம் மோதியதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார்.
 
சாவகச்சேரி கொடராவில் பிரதேசத்தினைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான யோகேஸ்வரன் கஜந்தன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார்.
 
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
 
அச்சுவேலியில் தனியார் வகுப்பில் கற்பித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .