2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தகைமை அடிப்படையில் அதிபர் நியமனம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'வட மாகாணத்தில் அதிபர்களின் நியமனங்கள் தகைமையின் அடிப்படையில் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாண கல்வி அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 'வட மாகாணத்தில் அதிபர்களின் நியமனங்கள் தகைமையின் அடிப்படையில் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இருந்தும் தற்போது தகைமை குறைந்தவர்களுக்கே அதிபர் நியமனங்கள் வழங்கப்படுவதால் பொருத்தமான தகைமையுடையவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

அத்துடன், வடமாகாண கல்வி அமைச்சர் நடைமுறைக்கு தேவையான பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைப்பது மிகவும் அவசியம்' எனவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .