2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

Super User   / 2013 நவம்பர் 21 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்; தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல், அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல், திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் (டக்ளஸ் தேவானந்தா) ஒருவருடன் இணைந்து முன்னெடுப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப்பதவி 2013ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருக்கும்".

  Comments - 0

  • J.Kannan Friday, 22 November 2013 04:03 AM

    இதில் முக்கிய விடயம் என்னவென்றால் அரசாங்கத்தின் பிரதான கொள்கையான மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்காகவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகச் செய்திகள் மூலம் உறுதியாக தெரிய வருகின்றது. திரு.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேறு சிந்தனையினை தமது தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டே தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றனர்.

    இப்போது எந்த சிந்தனையின் அடிப்படையில் அல்லது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படப் போகின்றார்கள்? என்பதை திரு. சம்பந்தன் அவர்களோ அல்லது திரு.விக்னேஸ்வரன் அவர்களோ பகிரங்கமாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
    -கண்ணன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .