2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மதனமோதகம் விற்றவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மதன மோதகங்களை (போதைப்பொருள்) விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவருக்கு எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  சந்தேக நபரை  ஆஜர்ப்படுத்தியபோதே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

யாழ். சத்திரத்துச் சந்திப் பகுதியில் மதன மோதகங்கள் (போதைப்பொருள்) விற்பனை செய்ததாகக் கூறப்படும்  மேற்படி சந்தேக நபரை  யாழ். பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்துள்னர்.

இது தொடர்பில்  யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 100 மதன மோதகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .