2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை; தலையிலிருந்து சன்னம் மீட்பு

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னலையில் நடத்தப்பட்டது.

இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிடறி பகுதியில் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(படங்கள் :எஸ்.கே.பிரசாத்)


தொடர்புடைய செய்தி:

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீ
ட்பு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .