2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அச்சுவேலி வைத்தியசாலைக்கு புதிய சமையலறை

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு புதிய சமையலறைக் கட்டிடம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் மேற்படி கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.

அச்சுவேலி மத்திய கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர் சங்கத்தினால் 2 மில்லியன் ரூபா செலவில் மேற்படி கட்டிடம் அமைக்கப்பட்டது.

அச்சுவேலி வைத்தியசாலை பொறுப்பதிகாரி கு.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோப்பாய் பிரசேத செயலர் ம.பிரதீபன், பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி சுகனுதா அன்ரன் சுதாகரன், கோப்பாய் கோட்டக் கல்வி அதிகாரி வே.பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள், நலன்புரி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .