2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எனது வீட்டு வளவினுள் இராணுவப் புலனாய்வாளர்கள்: குருகுலராஜா

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கிளிநொச்சி தர்மபுரத்தில் எனது வீடு அமைந்துள்ள ஒழுங்கையினுள் கடந்த இரண்டு நாட்களாக நடமாடித் திரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் இரவு வேளைகளில் வீட்டு வளவிற்குள் நுழைவதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று (30) தெரிவித்துள்ளார்.

நாய்கள் கடந்த 28 ஆம் திகதி இரவு குரைக்கும் சத்தம் கேட்டு தனது வீட்டு மின்குழியினைப் ஒளிரச் செய்தவேளை, வீட்டு வளவினுள் இராணுவப் புலனாய்வாளர்கள் நின்றதாகவும் அவர்கள் மின்குமிழினை அணைக்கும்படி மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இதனால் தனது வீட்டிலுள்ளவர்களும், அந்த ஒழுங்கையினுள் வசிப்பவர்களும் அச்சத்துடன் வாழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .