2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன், எஸ்.ஜெகநாதன்


தமிழரசுக் கட்சியின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட தந்தை செல்வா அறக்கொடையினால்  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்களுக்கு உதவித் தொகை நேற்று சனிக்கிழமை (30) வழங்கிவைக்கப்பட்டன.

தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேற்படி பள்ளியில் கல்வி கற்கும் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களில்; 5 மாணவர்களுக்கு முதற்கட்டமாக தலா 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.

பள்ளியின் அதிபர் எஸ்.காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தந்தை செல்வா அபிவிருத்திச் சங்க உறுப்பினர் லயன்.சி.ஹரிகரன், அறக்கொடை நிதியத்தினைச் சார்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி கொடுப்பனவின் அடுத்த கட்டம் தெரிவுசெய்யப்பட்ட  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்களுக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் வழங்கப்படவுள்ளது.

தெல்லிப்பழையில் அமைந்துள்ள தந்தை செல்வா தொடக்கப் பள்ளி (1977 – 1983) காலப்பகுதியில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .