2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்தால் எம்.பியாகியிருப்பேன்:ஆனந்தசங்கரி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

விடுதலைப்புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நான் ஒரு எம்.பியாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (30) கே.கே.எஸ்.வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு  விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று.
நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .