2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அமைச்சர் விஜயம் செய்துள்ள நிலையிலேயே வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

மேற்படி வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  பவானி பசுபதிராஜாவுடனும் அமைச்சர்  கலந்துரையாடினார்.

இந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறை, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியன தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கொண்டுவந்தார்.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .