2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கோவில்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறா வண்ணம் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கோவில்களில் இடம்பெற்றுவருகின்ற திருட்டுச் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்கவும்  கோவில்களின்  புனிதத்தன்மையை பாதுகாப்பதற்குமான பிரார்த்தனை   நாளைமறுதினம் புதன்கிழமை (04) மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரார்த்தனை சர்வதேச இந்து மதகுருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்து மதகுருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் தலைமையில் சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவன் கோவிலில்  இந்தப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள பிரசித்தமான ஆலயங்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்தப் பிரார்த்தனையின்போது, பல்வேறு ஆலயங்களின் குருமார்களினால் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரையும் சிவலிங்கப்பெருமானுக்கு திரவிய அபிண்ஷகமும் மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .