2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உடற் பயிற்சியின் போது மயக்கமடைந்த வைத்தியர் உயிரிழப்பு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

உடற் பயிற்சியின் போது மயக்கமடைந்த வைத்தியர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். ஹடுவென பகுதியைச் சேர்ந்த 35 வயதான சஞ்சினி பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாலி படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிவில் வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் இன்று காலை உடற் பயிற்சி ஈடுபட்ட போது மயக்கமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .