2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்: ஈ.பி.டி.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான கே.கமலேந்திரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.தவராசா தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கமலேந்திரனே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டானியல் றெக்ஷியனின் கொலைக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரன், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை (05) கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Sumathy M Saturday, 07 December 2013 01:49 PM

    நல்ல விஷயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X