2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவிற்கு நேரடி விமானசேவை: வடமாகாண சபையில் தீர்மானம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாலி மற்றும் திருகோணமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும் என வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை  ஏகமனதாக நிறைவேற்றப்படடுள்ளது.

வடமாகாண சபையின் 6 ஆவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த பிரேரணை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை மற்றொரு உறுப்பினரான கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிய தீர்மானம் ஏகமனதாக சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

'வடக்கிலுள்ள பலாலி கிழக்கிலுள்ள திருமலை விமான நிலையங்களிலிருந்து இந்தியாவிற்கு நேரடி விமானசேவை நடத்தப்படவேண்டும்.

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தகத்துறைமுகமாக மாற்றப்படவேண்டும். அத்துடன், தலைமன்னார் வரையில் ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையினையே சிவாஜிலிங்கம் சபையில் சமர்ப்பித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X