2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மணல் அகழ்ந்த 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். கெற்போலி, பாலாவி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்ததாகக் கூறப்படும்  12 பேரை  ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து  06 உழவு இயந்திரங்களை கைப்பற்றியதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (02) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .