2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மின் தாக்கி விமானப்படை வீரர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 03 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். பலாலி விமானப்படைத் தளத்தில் மின்சார வேலை செய்துகொண்டிருந்த கொழும்பு, பாணாந்துறையைச் சேர்ந்த விமாப்படை வீரரான   நெபுவன ஆராய்ச்சிகே மாலிங்க பியறஞ்சித (வயது 23) என்பவர் மின்சாரம் தாக்கி திங்கட்கிழமை (03) காலை உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை  (02) இரவு மின்சாரத் தாக்குதலுக்குள்ளான இவர்,  உடனடியாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .