2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆரம்பப் பிரிவு மாணவர்களின் எழுத்து வாசிப்பு திறனை மேம்படுத்தும் செயற்றிட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் எழுத்து மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கிலான செயற்றிட்டம் நாளை புதன்கிழமை (04) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்தார்.

இச் செயற்றிட்டம் தொடர்பாக ஏற்கனவே ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டன.

இந்தப் பயிற்சி வகுப்புக்களில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கு செயல் அட்டைகள் வழங்கப்பட்டு எவ்வாறான கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட செயல் அட்டைகள் மூலம் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் இன்று முதல் மேற்படி செயற்றிட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

முதற்கட்டமாக தரம் 2, தரம் 5 மாணவர்களுக்கு இச்செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஒவ்வொரு மாதமும் எட்டு செயல் அட்டைகள் மூலமாக இந்தச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவற்றினை கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர்கள் கண்காணிப்பாளர்கள் எனவும் கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .