2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒருவகையான பழங்களை உட்கொண்ட சிறுமிகள் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஒரு வகையான  பழங்களை உட்கொண்ட  சிறுமிகள் இருவர் சுகவீனமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை  (04) மாலை அனுமதிக்கப்பட்டதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பொலிஸார்  தெரிவித்தனர்.

ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் மயிலங்காட்டைச் சேர்ந்த இளங்கோ யதுசிகா (வயது 08), விஜயகுமார் நிருத்திகா (வயது 08) ஆகியோரே சுகவீனமடைந்தனர்.

இச்சிறுமிகள் ஒரு வகையான  பழங்களை உட்கொண்டதை கண்ட  உறவினர்கள், உடனடியாக சிறுமிகளை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .