2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகள்

Menaka Mookandi   / 2014 மார்ச் 10 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 59 பேருக்கு மருத்துவ தேவைக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உரையாற்றுகையில், 'வடமாகாண ஆளுநர் நம்பிக்கை நிதியத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மருத்துவ தேவையுடைய 287 பேருக்கு 14.76 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளன' என்றார். 

'இந்த நன்கொடைக் கொடுப்பனவுகள், புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்ற தீவிரமானதும், அபாயமானதுமான நோய்களின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி ஒருவர் 25 ஆயிரம் ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரையிலும் மருத்துவ உதவிகள் பெறுகின்றனர். அத்துடன் ஆளுநர் நம்பிக்கை நிதியிலிருந்து தலங்களின் பராமரிப்பிற்காக 40 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக' ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .