2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் நல்லிணக்க ஆலோசகர் கிளிநொச்சி விஜயம்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


ஜனாதிபதியின் தேசிய நல்லிணக்க ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க வியாழக்கிழமை (13) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடலொன்றினை நடத்தினார்.

சமூக பாதுகாப்பு மற்றும் குழுக்களை ஒருங்கிணைத்தல் என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் தாம் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசகரிடம் எடுத்துரைத்தனர்.

அதற்கு ஜனாதிபதி ஆலோசகர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுடன் அந்த பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து பொதுமக்களுக்கு பதிலளித்தார்.

கரைச்சி பிரதேச செயலர் கோபாரபிள்ளை நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிராம அலுவலர்களும், அபிவிருத்தி அலுவலர்களும், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களும், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும், பாடசாலை அதிபர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .