2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உதவித் தொகை வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள 80 பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக 1 இலட்சம் ரூபாவும், இரண்டு விதவைப் பெண்களுக்கு தலா 2500 ரூபாவும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 2500 ரூபாவும் நிதியுதவி வழங்கப்பட்டன.

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் 35 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. வணிகர் மன்றத்தலைவர் வ.சிறிபிரகாஷ; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி அ.சாந்தலீசன், தென்மராட்சி கல்விப் பணிப்பாளர் சு. கிருஷ;ணகுமார்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போதே மேற்படி உதவித்தொகை வழங்கப்பட்டன. இதற்கான நிதியினை சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வர்த்தகர்கள் மற்றும் தென்மராட்சி பிரதேச மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தென்மராட்சிப் பிரதேச மக்கள் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

இதனைவிட குறித்த பகுதி மக்களின் நிதியுதவியின் மூலம் யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் கல்விப் பயிலும் மாணவியொருவருக்கு கல்விச் செலவிற்காக மாதாந்தம் 3750 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • thas Sunday, 23 March 2014 02:57 PM

    குட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .