2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அமல்ராஜ்ஜின் உடல் அஞ்சலிக்காக அவரது பாடசாலையில்

Kogilavani   / 2014 மார்ச் 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ்ஜின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது பாடசாலையான சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று (17) மாலை அவரது உடல் குருநகர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து, யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுஷ;டித்ததுடன், இரண்டு பாடசாலைகளும் இன்று கல்வி நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

நேற்று முன்தினம் (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெற்ற பொன் அணிகளின் ஒருநாள் போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களுக்கும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இதன்போது, சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் அமல்ராஜ் வட்டுக்கோட்டை பழைய மாணவர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • Bahee Tuesday, 18 March 2014 12:30 PM

    காட்டுமிரான்டித்தனமான மாணவ‌ செயற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .