2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆலய கதவு தீக்கிரை

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் - சாவகச்சேரி வீதியில் அமைந்துள்ள வீரவாணி நாச்சிமார் கோவிலின் கடற்கரைப் பக்கமாகவுள்ள ஆலயக் கதவு விசமிகளினால் வியாழக்கிழமை (22) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபைத் தலைவர் வெள்ளிக்கிழமை (23) தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று வெள்ளிக்கிழமை (23) அதிகாலை வழமை போன்று வந்து பூஜைக்காக ஆலயத்தினை திறந்து பார்த்த போதே கதவு தீயிட்டு எரிக்கப்பட்டமை தெரிய வந்ததுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .