2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாடு வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ். உடுப்பிட்டி, இலந்தக் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாடொன்றை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கொற்றாவத்தை, கமரபாகு ஆகிய இடங்களைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய  இருவரை திங்கட்கிழமை (26) காலை கைதுசெய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இரகசியமாக மாடு வெட்டுவதாக பொலிஸாருக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் இருவரையும் கைதுசெய்தனர்.

இருவரிடமும் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .