2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் சிறுவர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல்

Super User   / 2014 மே 29 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா இன்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.

50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சாகச விளையாட்டுத் திடலுக்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நாட்டினார்.

சுழலும் ராட்ணம், கயிறில் நடத்தல், சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட சாரணர் அமைப்புத்தலைவர் ப.தேவரஞ்சன், ஆளுநர் செயலக உயர் அதிகாரிகள், சாரணர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .