2025 ஜூலை 09, புதன்கிழமை

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை இரு குழுக்களுகிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (25) தெரிவித்தனர்.

மத்தாளோடை கிராமத்தை சேர்ந்தவர்களான இராசலிங்கம் தனுஸ்கரன் (வயது 20), பூபாலசிங்கம் உமாரமணன் (வயது 26) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியிலுள்ள தையல் கடையொன்றுக்கு முன்பாக கூடும் இளைஞர்கள் அக்கடைக்கு வருபவர்களை தினம் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இவர்களை கடை உரிமையாளர் பலமுறை எச்சரித்தும் அதனை குறித்த இளைஞர்கள் செவிமடுக்கவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை தையல் கடைக்கு வந்த இளைஞர் ஒருவரை மேற்படி இளைஞர்; குழு தொந்தரவு செய்ததுடன், தாக்குதலும் மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து, அவ்விடத்திற்கு வந்த மற்றுமொரு குழு தொந்தரவில் ஈடுபடுபவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் மேற்கொண்டதுடன், வாளாலும் வெட்டியுள்ளனர். வாள்வெட்டில் படுகாயமடைந்த மேற்படி இளைஞர் குழுவை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .