2025 ஜூலை 09, புதன்கிழமை

வாய்ப்பாட்டு பயிற்சிப்பட்டறை

George   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப்பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் மற்றும் வடக்கு மாகாணசபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு என்பவற்றுடன் இணைந்து நடத்தும் தெய்வீக சுகானுபவம் கலாச்சார விழாவின் வாய்ப்பாட்டு பயிற்சிப் பட்டறை திங்கட்கிழமை (25) இடம்பெற்றது. 

நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையை தென்னிந்தியாவின் பிரபல்யமான இசைத்துறை மேதை வு.ஏ.ராம்பிரசாத் நடத்தினார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில், இசைத்துறையின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய  ஆக்க நிகழ்வுகளின் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து, சங்கிலியன் தோப்பில் திங்கட்கிழமை (25) மாலை இசைக்கச்சேரியொன்று நடைபெறவுள்ளது. இதனையும் ராம்பிரசாத் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .