2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் இரு வயோதிபர்கள் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், பொ.சோபிகா

யாழ்ப்பாணம், முதிரைச் சந்தியில் வானொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூரைச் சேர்ந்த வி.கே.கணேசலிங்கம் (வயது 63) என்பவரே படுகாயமடைந்தார்.

இதேவேளை, யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீதியைக் கடந்த வயோதிபரை கன்ரர் ரக வாகனம் மோதியதில் கொழும்புத்துறையைச் சேர்ந்த க.யோகராஜா (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (26) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .