2025 ஜூலை 09, புதன்கிழமை

பஸ் மீது கல்வீச்சு; மூவர் காயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் ஒன்று மீது பண்ணைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (01) இரவு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி;கப்பட்டுள்ளனர்.

வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெற்ற பஸ் வண்டியொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ள முயன்ற போதே இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெறாத பஸ் உரிமையாளர்கள் மூவரே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் இம்மூவருக்கு வலை வீசப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களைச் சேவையில் ஈடுபட அனுமதிக்கவில்லையென்ற கோபத்திலேயே அவர்கள் இந்த  கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ் - கொழும்பு வழித்தடங்கல் பஸ் சேவையில், வழித்தடங்கல் அனுமதியில்லாதவர்கள் சேவையில் ஈடுபடமுடியாது என யாழ்ப்பாணப் பொலிஸார் திங்கட்கிழமை (01) பகல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .